×

கந்தர்வகோட்டை அருகே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

கந்தர்வகோட்டை,ஜன.20: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தொடங்கி வைத்து பேசியதாவது:- வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு தமிழுக்கு புகழை சேர்த்த இவரது மிகச்சிறந்த படைப்பு இந்த திருக்குறள் எனும் நூல். 1330 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின் போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் தினந்தோறும் திருக்குறளை படிக்க வேண்டும் என்றார். மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அதிகமான திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியை தன்னார்வலர்கள் சுபதா, கலைமணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post கந்தர்வகோட்டை அருகே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி appeared first on Dinakaran.

Tags : Tirukkural ,Gandharvakot ,Kandarvakottai ,Pudukottai ,Kandarvakottai Union Sangam ,Thiruvalluvar Day ,Thirukkural recognition ,Rahamadullah ,Home Search Education Center Union ,Valluvan ,
× RELATED கந்தர்வகோட்டையில் முந்திரி விளைச்சல் துவங்கியது