×

கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த அதிகாரிகளுக்கு வெள்ளி பதக்கம்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர், ஜன. 21: திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் கொடிநாள் வசூல் சாதனை புரிந்த பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் சிறப்பு கேடயமும் அரசின் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்திய திருநாட்டிற்காக இன்னுயிர் ஈந்த படைவீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முன்னாள் படை வீரர்கள் குடும்பங்களை பாதுகாக்கவும் துயர் தீர்க்கும் வகையிலும் 2023ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 7ம் தேதி கொடி நாள் நிதி வசூல் நிகழ்ச்சியை கலெக்டர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து மாவட்டத்தில் அதிக அளவில் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சிறப்பு கேடயங்களையும், அரசின் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் உள்பட பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்களுக்கு சிறப்பு கேடயங்கள், அரசின் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஓ.சுகபுத்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், உதவி கலெக்டர் பயிற்சி ஆயுஷ் வெங்கட் வத்ஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் ராஜலட்சுமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

The post கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த அதிகாரிகளுக்கு வெள்ளி பதக்கம்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Collector ,T.Prabhushankar ,Tiruvallur district ,India ,Dinakaran ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு