- ஆதிபரசக்தி பீதம்
- கிருஷ்ணன் கோவில்
- இருமுடி
- மேல்மருவத்தூர்
- நாகர்கோவில்
- மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி கோயில் தைபுசா திருவிழா
- நாகர்கோயில் கிருஷ்ண கோய
- ஆதிபரசக்தி பீதா
நாகர்கோவில், ஜன.21: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு, நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் ஆதிபராசக்தி பீடத்தில் இருந்து 4005 பேர் பல கட்டங்களாக இருமுடி கட்டி புனித பயணம் மேற்கொண்டனர். இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு தமிழில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் திருப்பள்ளியெழுச்சி, அடிகளார் தோத்திரம், வேண்டுதல் கூறு, 108, 1008 மந்திரங்கள், சக்தி கவசம், மந்திரக் கூறு, சக்தி வழிபாடு, சரணத்துடன் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சக்தி பீட தலைவர் சின்னத்தம்பி தலைமையில் உலக மக்கள் அன்புடன் வாழவும், மண் வளம், மழை வளம் செழிக்கவும், கூட்டுத் தியானம் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் ஏழை பெண்களுக்கு ஆடை தானம் பீட தலைவர் சின்னத்தம்பி, துணைத் தலைவர் அருணாச்சலம் முன்னிலையில் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மேளதாளத்துடன் மஞ்சள் கலந்த சிவப்பு ஆடையுடன் இருமுடியை தலையில் தாங்கியும், இடது தோளில் இருமுடியை தாங்கியும் ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் பயணம் மேற்கொண்டனர். விழா ஏற்பாடுகளை சக்தி பீட தலைவர் சின்னத்தம்பி, துணைத் தலைவர் அருணாச்சலம், பொருளாளர் அசோக்குமார், சுப்பிரமணியன், மகளிரணி தலைவி செல்வரத்தினம், செயலாளர் சந்திரன், நாகராஜன், செந்தில், பால்ராஜ், ராமகிருஷ்ணன் மற்றும் பீடத்தினர் செய்திருந்தனர்.
The post கிருஷ்ணன்கோயில் ஆதிபராசக்தி பீடத்தில் இருந்து 4005 பேர் இருமுடி கட்டி மேல்மருவத்தூர் பயணம் appeared first on Dinakaran.