×

ரயில்வே தண்டவாளம் பராமரிக்கும் பணி கோவை புறநகர் பைல் 1 புஜங்கனூரில் அரசு பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்

காரமடை, ஜன.21: காரமடை அருகே புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. காரமடை அருகே தேக்கம்பட்டியில் இயங்கி வரும் ஐடிசி நிறுவனம் சார்பில் கோவை கேஜி மருத்துவமனை, மேட்டுப்பாளையம் ஐ பவுண்டேஷன் இணைந்து நேற்று இலவச பொது மருத்துவ முகாமை புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தின. முகாமை ஐடிசி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வெங்கட் ராவ், பொறியியல் துறை தலைவர் முரளி, மனிதவள துறை தலைவர் மகிந்தரபாபு உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமில் பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்டவை பொதுமக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இதில் புஜங்கனூர், கணவாய்பாளையம், மருதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ சிகிச்சை பெற்று சென்றனர். முடிவில் ஐடிசி நிறுவனத்தின் வேளாண்துறை மேலாளர் வீரமணி நன்றி தெரிவித்தார்.

The post ரயில்வே தண்டவாளம் பராமரிக்கும் பணி கோவை புறநகர் பைல் 1 புஜங்கனூரில் அரசு பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Govt School ,Coimbatore Pile 1 ,Bujanganur ,Karamadai ,Bujanganur Government High School ,Coimbatore KG Hospital ,Mettupalayam I Foundation ,ITC ,Thekambatti ,
× RELATED ஆட்டையாம்பட்டி அரசு பள்ளியில் நூதனம்...