×

3 ஆண்டு காணிக்கையை சேமித்து சில்லறையாக ரூ.1.30 லட்சம் கொடுத்து பைக் வாங்கிய அர்ச்சகர்

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பைரெட்டி பள்ளி மண்டலம் குப்பனப்பள்ளி கிராமத்தில் காலபைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் முரளிதரன் என்பவர் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவர் புதிய பைக் வாங்க கடந்த 3 ஆண்டுகளாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சில்லறை காசுகளை சேமித்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்குமுன் பலமநேர் நகரத்திற்கு சென்று இருசக்கர ஷோரூமில் அவர் விரும்பிய பைக்கின் விலை ரூ.1.30 லட்சம் என அறிந்து வந்தார். பின்னர் 3 ஆண்டுகளாக சேமித்து வைத்த சில்லறை நாணயங்களை மூட்டையாக கட்டிக் கொண்டு ஷோரூம் மேலாளரிடம் சென்று வழங்கினார். அதனை பெற்று கொண்ட ஷோரூம் மேலாளர் இருசக்கர வாகனத்தை வழங்கினார். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post 3 ஆண்டு காணிக்கையை சேமித்து சில்லறையாக ரூ.1.30 லட்சம் கொடுத்து பைக் வாங்கிய அர்ச்சகர் appeared first on Dinakaran.

Tags : Archakar ,Chittoor ,Kalabhairava Temple ,Kuppanapally Village ,Chittoor District, Piretti School Zone, Andhra Pradesh ,Muralitharan ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...