×

சீனாவில் பள்ளி விடுதியில் தீ; 21 பேர் பலி

பாங்காக்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பாங்செங் மாவட்டத்தில் உள்ள இங்காய்யில் விடுதியுடன் கூடிய ஆரம்ப பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் விடுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கு பரவியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் சிக்கி உயிரிழந்த நிலையில் 13 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒரு மாணவன் உயிருடன் மீட்கப்பட்டான். உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் மூன்றாம் வகுப்பு படித்து வந்தவர்கள். தீவிபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜியாங்சு மாகாணத்தில் உற்பத்திமையத்தில் நடந்த தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

The post சீனாவில் பள்ளி விடுதியில் தீ; 21 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : China ,BANGKOK ,Ingai, Pangcheng District, Henan Province, China ,Dinakaran ,
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...