×

முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.3,000

சென்னை: முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் இருந்து மல்லி, ரோஸ், சாமந்தி உள்பட பல வகையான பூக்கள் வருகிறது. கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், முகூர்த்த நாளை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன்படி, நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.3,000, ஐஸ் மல்லி ரூ.2300, காட்டு மல்லி ரூ.2000, முல்லை ரூ.1,500, ஜாதி மல்லி ரூ.1,200, கனகாம்பரம் ரூ.1,000, அரளி பூ ரூ.350, சாமந்தி ரூ.90, சம்பங்கி ரூ.210, பன்னீர் ரோஸ் ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.120 க்கும் விற்பனையானது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், இன்று முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வருகிற 25ம்தேதி தைப்பூசம் என்பதால் அன்றைய தினம் அனைத்து பூக்களின் விலையும் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. இன்னும் ஒரு வாரம் விலை உயர்வு நீடிக்கும்,’’ என்றார்.

The post முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.3,000 appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mugurtha ,CHENNAI ,Koyambedu ,Mugurtha day ,Koyambedu market ,Kanchipuram ,Chengalpattu ,Thiruvallur ,Mukurtha day ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...