×

சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் உறவினர்கள், நண்பர்களை அனுமதிக்க கூடாது: பதிவுத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் தங்கள் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை அனுமதிக்ககூடாது என சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சார் பதிவாளர் அலுவலகங்களில், துறைக்கு தொடர்பில்லாத நபர்கள் யாரும் பணியில் ஈடுபடக்கூடாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்களாக செயல்பட்டு ஊழலுக்கு வித்திடும் நபர்களை கண்டறிந்திடவும் அவர்களை விசாரித்து தரகர்களாக அறிவித்திடவும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் பதிவுச்சட்ட பிரிவு 808 முதல் 800 வரை வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சில நேர்வுகளில் பதிவு அலுவலர்களின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இதர வெளிநபர்கள் பதிவு அலுவலர்களால் அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர்கள் மூலம் கையூட்டு பெறப்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் தொடர்ந்து பெறப்படுகிறது. இதனை தவிர்த்திட பதிவு அலுவலார்களால் பதிவு அலுவலகத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படும் மேற்கூறிய நபர்கள் இடைத்தரகர்களாக கருதப்படுவர் எனவும் அவர்கள் இடைத்தரகர்களாக அறிவிக்கப்பட்டு குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. எனவே, பதிவு அலுவலகர்கள் தங்கள் அலுவலகங்களைப் பொறுத்து அலுவலக வேலை நிமித்தமாக தங்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இதர வெளிநபர்களை அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது வெளியிடப்படும் இச்சுற்றறிக்கை பதிவு அலுவலர்களால் பின்பற்றப்படுவதை மாவட்டப் பதிவாளர்கள், துணைப்பதிவுத்துறை தலைவர்கள், சார் பதிவாளர் அலுவலக ஆய்வின்போது தொடர்ந்து கண்காணிக்கவும் இச்சுற்றறிக்கைக்கு முரணாக பதிவு அலுவலர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்றறிக்கை மாவட்ட பதிவாளர்களுக்கும் பெறப்பட்டமைக்கு ஒப்புதலை மாவட்டப் பதிவாளர்கள் சார்பதிவாளர்கள் துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கும் அனுப்பிடவும் ஒருங்கிணைந்த ஒப்புதல் அறிக்கையினை துணைப்பதிவுத்துறை தலைவர்கள் இந்த அலுவலகத்திற்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் உறவினர்கள், நண்பர்களை அனுமதிக்க கூடாது: பதிவுத்துறை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinesh Ponraj Oliver ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...