×

ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: தீபாராதனை மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்டது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்த பிரதமர் சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வந்தார். அப்போது கோயில் முன்பு கூடியிருந்த மக்கள் பிரதமர் மோடிக்கு முழக்கங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினார்.

22 புனித தீர்த்தங்களிலும் நீராடிய பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். ருத்ராட்ச மாலைகளுடன் பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனத்திற்கு பின் ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தை வலம் வந்து பிரதமர் வழிபட்டார். கோயிலில் தரிசனம் முடித்த பின் கதாகாலட்சேபம் மூலம் ராமாயண சொற்பொழிவை கேட்கவுள்ளார்.

ராமேஸ்வரம் கோயில் நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி இன்றிரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். 11 நாட்கள் விரதம் இருந்து வரும் மோடி மடத்தில் தரையில் துணி விரித்து படுத்துறக்க ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து பிரதமர் மோடி நாளை காலை தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்கிறார். அரிச்சல் முனையில் கோதண்டராமர் கோயிலில் பிரதமர் மோடி நாளை வழிபாடு நடத்துகிறார்.

The post ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: தீபாராதனை மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Modi ,Ramanathaswamy Temple ,Diyarathana ,Tirtham ,Rameshwaram ,Sami ,Ramanathasamy Temple ,Tamil Nadu ,Trinchi Srirangam Temple ,Prime Road ,Diyaradena ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...