×

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை!

மும்பை: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, வரும் 22ம் தேதி இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் 22ம் தேதி பங்குச்சந்தைகள் இயங்காது என மும்பை பங்குச்சந்தை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்படுவதால் பங்குச்சந்தைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ம் தேதி அன்று ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 22-ம் தேதி அன்று பங்குச் சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 22ம் தேதி அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று (சனிக்கிழமை) பங்குச் சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை! appeared first on Dinakaran.

Tags : Ayothi Ramar Temple Opening Ceremony ,MUMBAI ,JOINT VENTURES ,AYOTHY RAMAR TEMPLE ,Mumbai Stock Exchange ,Ayodhi Ramar Temple ,EU government ,Ayoti ,Ramar Temple Opening Ceremony ,Stock Companies ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!