×

ஜோதி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு!

தஞ்சை: சிறப்பாக பணியாற்றிய பணியாளருக்கு புதிய இருசக்கர வாகனம் பரிசாக வழங்கி ஆச்சர்யப்படுத்திய தொண்டு நிறுவனம். ஜோதி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரிக்கு ஜோதி அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் புதிய இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

தஞ்சை நகர போக்குவரத்து ஆய்வாளர் திரு எம் ஜி ரவிச்சந்திரன் அவர்கள் புதிய இரு சக்கர வாகனத்தின் சாவியை ஜோதி அறக்கட்டளை மேலாளருக்கு வழங்கி வாழ்த்தி பேசினார். சாலையில் இருசக்கர வாகனம் இயக்கும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் மற்றும் இதர சாலை விதிகளை முறையாக ஒவ்வொரு வாகன ஒட்டியும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டு புத்துணர்ச்சியாக பணியாற்ற உதவிடும் வகையில் பரிசு வழங்கப்படுவதாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

The post ஜோதி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு! appeared first on Dinakaran.

Tags : Jyoti Foundation ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...