×

நீலகிரியில் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் எதிரொலி 8 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்

ஊட்டி : லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் காரணமாக குன்னூரில் 8 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள்கள் குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் உள்நாட்டு நுகர்வு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏலம் விடப்படுகிறது. உள்நாட்டு தேவைக்காக வாங்குவோர் இங்கு ஏலத்தில் பங்கேற்று தேயிலைத்தூளை வாங்கி அவற்றை லாரிகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர்.

வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் தேயிலைத்தூளை லாரிகளில் ஏற்றி கொச்சி, தூத்துக்குடி, பம்பாய் துறைமுகங்களுக்கு கொண்டு சென்று கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். மலை மாவட்டமான நீலகிரியில் இருந்து தேயிலைத்தூளை கொண்டு செல்ல லாரி போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழலில் அண்மையில் நடந்த குளிர்கால கூட்ட தொடரில் ஒன்றிய அரசு ேமாட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதில் கவன குறைவாக அல்லது அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு காவல்துறையினர் அல்லது அதிகாரிகளுக்கோ தொிவிக்காமல் ஓடி விடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.7 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் கொண்டு வரப்பட்ட கடுமையான தண்டனைக்கு டிரைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் டிரைவர்களின் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

டிரைவர்களை பாதிக்கும் புதிய சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 17ம் தேதி முதல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்திலும் பெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை.

கடந்த 3 நாட்களாக லாரி டிரைவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தேயிலைத்தூள் கொண்டு செல்செல்லக்கூடிய சுமார் 70க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் ஏலத்தில் எடுக்கப்பட்டு குடோன்களில் வைக்கப்பட்டுள்ள தேயிலைத்தூள்கள் தேக்கமடைந்துள்ளன. இதுவரை 8 லட்சம் கிலோ தேயிலைத்தூள் ேதக்கமடைந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதவிர மாவட்டம் முழுவதும் உள்ள 130க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளிலும் கடந்த 3 நாட்களாக உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூள் ஏலத்திற்கு அனுப்ப முடியாமல் தேங்கியுள்ளன. இதனால் தேயிலைத்தூள் வாங்கி விற்பனைக்கு அனுப்புபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாரம் தூக்கும் தொழிலாளர்களும் வேலையின்றி பாதித்துள்ளனர்.

இது குறித்து குன்னூர் சாலை போக்குவரத்து சங்க செயலாளர் சேகர் கூறுகையில், ‘‘லாரி டிரைவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் குன்னூரில் இருந்து லாரிகள் மூலம் தேயிலைத்தூள் அனுப்புவது பாதித்துள்ளது. குடோன்களில் உள்ள தேயிலை தூள்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகளிலும் தேயிலைத்தூள் தேக்கமடைந்துள்ளன. வேலைநிறுத்த போராட்டம் தொடரும் பட்சத்தில் தேயிலைத்தூள் ேதக்கம் மேலும் அதிகரிக்கும்’’ என்றார்.

The post நீலகிரியில் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் எதிரொலி 8 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Coonoor ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...