×

ராமேஸ்வரத்துக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதால் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்துக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் ஆட்சியர் அறிவித்துள்ளார். 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகிறார். இதற்கென பிரதமர் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு திருச்சி செல்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிபாடு செய்த பின் இன்று இரவு அங்கு தங்குகிறார்.

இதையடுத்து, நாளை அவர் தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோயிலுக்கு செல்கிறார். இந்நிலையில், ராமேஸ்வரத்துக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் ஆட்சியர் அறிவித்துள்ளார். பாதுகாப்பு நலன் கருதி இன்று, நாளை போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

நாளை ராமேஸ்வரம் நகரில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று, நாளை கனரக வாகனங்கள் ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் சென்று வர தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். தனுஷ்கோடி சுற்றுலா தலத்துக்கு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாத சாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இன்று, நாளை ராமேஸ்வரம் நகர்ப்பகுதி முழுவதும் டிரோன் கேமரா பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post ராமேஸ்வரத்துக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதால் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Rameswaram ,District Collector ,Ramanathapuram ,Ramanathapuram Collector ,Modi ,Tamil Nadu ,Srirangam ,Trichy ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...