×

திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி மாதா கோயிலில் தேர் பவனி

 

திருக்காட்டுப்பள்ளி,ஜன.20: திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி மாதா கோயிலில் தேர் பவனி நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரியில் உள்ள புனித வியாகுல மாதா கோயிலில் கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அதைத்தொடர்ந்து வந்த நாட்கள் நவ நாட்களாக கருதப்பட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளாக நேற்று இரவு மின்விளக்குகளாலும், மல்லிகை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேரை மைக்கேல்பட்டி முதன்மை குரு இன்னோசன்ட் புனிதம் செய்து துவக்கி வைத்தார். முன்னதாக மாலை பொங்கல் வைத்து பெண்கள் பொங்கல் விழாவும் கொண்டாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைவர் டேவிட் ராஜ், துணைத்தலைவர் ஜெயராஜ், பொருளாளர் அருள்சாமி, ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

The post திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி மாதா கோயிலில் தேர் பவனி appeared first on Dinakaran.

Tags : Chariot Bhavani ,Palamarneri Mata Temple ,Thirukkatupalli ,Thirukkatupally ,Ther Bhavani ,St. Vyakhula Mata Temple ,Palamarneri ,Nava ,Bhavani ,Tirukkatupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு