×

திருவனந்தபுரத்தில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு போதகர் கைது

திருவனந்தபுரம், ஜன.20: திருவனந்தபுரத்தில் வீட்டுக்கு வரவழைத்து 13 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதகரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு அருகே உள்ள குலசேகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத் (59). பூவச்சல் பகுதியில் உள்ள ஒரு பெந்தேகொஸ்தே சர்ச்சில் போதகராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரவீந்திரநாத் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது வழியில் சந்தித்த ஒரு 13 வயது சிறுவனிடம் தன்னுடைய கம்ப்யூட்டரை ரிப்பேர் பார்த்து தர முடியுமா? என்று கேட்டு உள்ளார். அதற்கு சிறுவனும் சம்மதித்து உள்ளான். இதையடுத்து சிறுவனை ரவீந்திரநாத் வீட்டுக்கு அழைத்து சென்றார். பாஸ்டரின் கம்ப்யூட்டரில் ஆபாசப் படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன் அங்கிருந்து செல்ல முயன்றான். ஆனால் ரவீந்திரநாத் அவனை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினான். அதைத்தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காட்டாக்கடை போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து போதகர் ரவீந்திரநாத்தை கைது செய்தனர்.

The post திருவனந்தபுரத்தில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு போதகர் கைது appeared first on Dinakaran.

Tags : Pastor ,Thiruvananthapuram ,Rabindranath ,Kulasekaram ,Vistikyurkavu, Thiruvananthapuram ,Poovachal ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்