×

நீடாமங்கலம் அருகே விபத்து தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை கோடு வேண்டும்

நீடாமங்கலம்,ஜன.20: நீடாமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை கோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகையிலிருந்து – மைசூருக்கு நீடாமங்கலம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்காண வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை நீடாமங்கலம் அருகே தஞ்சை சாலையில் உள்ள ஒரத்தூர் திருவள்ளுவர் நகர், ஒரத்தூர், சித்தமல்லி, பரப்பனாமேடு கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து வாகனங்களில் வந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏறும்போது வாகனங்கள் வேகமாக வருவதால் அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. எனவே மேற்கண்ட கிராமங்களுக்கு திரும்பும் இடமான தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை கோடு அமைக்க சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நீடாமங்கலம் அருகே விபத்து தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை கோடு வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Nagai ,Mysore National Highway ,National Highway ,Dinakaran ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...