×

பழங்குடியின விவசாயிகளின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் கயல்விழி முன்னிலையில் கையெழுத்து

சென்னை: தமிழக அரசின் பழங்குடியினர் நல இயக்குனரகமும், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் – பெங்களூரு இணைந்து பழங்குடியின விவசாயிகளுக்கான நீடித்த நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அதன்படி, தோட்டக்கலை மற்றும் அதன் சார்ந்த மதிப்புகூட்ட தொழில் மேம்பாட்டுக்காக பழங்குடியின விவசாயிகளின் புதிய தோட்டக்கலை தொழில்நுட்பங்களை கொண்டு வந்து பழங்குடியினர் விவசாயிகளின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் துறை செயலாளர் லட்சுமி பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பழங்குடியின விவசாயிகளின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் கயல்விழி முன்னிலையில் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Kayalvizhi ,CHENNAI ,Directorate of Tribal Welfare, Government of Tamil Nadu ,Indian Institute of Horticulture Research ,Bengaluru ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...