×

காளை முட்டி வீசியதில் பெண் உட்பட 3 பேர் பலி

லால்குடி: காளை முட்டி வீசியதில் பெண் உட்பட 3 பேர் பலியாகினர். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கல்லகம் கிராமத்தில் பொங்கல் திருநாளையொட்டி அரசு அனுமதியின்றி பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சேர்ந்து நேற்று முன்தினம் மாரியம்மன் கோயில் வீதியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர். இந்த போட்டியை கல்லகம் கீழத்தெருவை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான பாலகிருஷ்ணன் (40) வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு காளை திடீரென பாலகிருஷ்ணன் வயிற்றில் முட்டி தள்ளியது. இதில் குடல் சரிந்து அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கல்லக்குடி போலீசார் கிராம முக்கியஸ்தர்கள் ராமலிங்கம், சிவக்குமார், பிச்சைமணி, செல்வகுமார், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், 40 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் பழமையான அந்தோணியார் கோயில் மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. இதில் கோவினிப்பட்டியை சேர்ந்த பூமிநாதன் (56) தனது காளையை அவிழ்த்தபோது, எதிர்பாராவிதமாக காளையின் கொம்பு பூமிநாதனின் கழுத்தில் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், கோவை மாவட்டம் அன்னூர் அருகே குப்பேபாளையம் கிராமம் தாத்தன் தோட்டத்தைச் சேர்ந்த ஓதிச்சாமியின் மகள் ஹர்ஷினி (29), மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது, ஹர்ஷினியை மாடு கொம்புகளால் குத்தி தூக்கி வீசியதில் அருகில் உள்ள 120 அடி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

The post காளை முட்டி வீசியதில் பெண் உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Kallagam ,Pullambadi Union ,Trichy district ,jallikattu ,Mariamman temple road ,
× RELATED திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்