×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி

 

ஈரோடு, ஜன.20: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சதுரங்க போட்டிகள் வருகின்ற 23 மற்றும் 24ம் தேதிகளில் இரண்டு நாட்கள் பவானிசாகர் பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற உள்ளது.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6ம் வகுப்பு முதல் 9ம் வரையிலும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வரை என 4 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் முதல் 3 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெறுவோர்க்கு 26ம் தேதி குடியரசு தினத்தன்று பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி appeared first on Dinakaran.

Tags : school students ,artist ,Erode ,artist's ,Bhavanisagar ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு