×

குண்டும் குழியுமாக உள்ள அரசு வேலை வாங்கி தருவதாக வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

காரியாபட்டி, ஜன.20: மதுரை-தூத்துக்குடி நான்குவழி சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை தூத்துக்குடி நான்குவழிச்சாலை மார்க்கத்தில் தான் காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. மதுரை தூத்துக்குடி நான்குவழி சாலை அமைக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளாகி விட்டது. தற்போது சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பழுதடைந்து இருப்பதால் வாகன போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் உயர் மட்ட அதிகாரிகள் இந்த சாலை வழியாக பயணம் செய்த போது சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை பார்வையிட்டு சென்றனர். அதன் பிறகு நெடுஞ்சாலை துறையினர் பழுதடைந்த இடங்களில் தற்காலிக பராமரிப்பு பணிகளை செய்தனர். ஆனால் தற்போது மீண்டும் அதே இடங்களில் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

நான்குவழி சாலை சந்திப்புகளில் ஹைமாஸ் விளக்குகள் எரியவதில்லை. இது பற்றி பொது மக்கள் புகார் தெரிவிப்பதற்காக அனுகிய போது தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் நான்கு வழிச்சாலை பராமரிப்பு பணிகள், சாலை சந்திப்பில் எரியாமல் கிடக்கும் ஹைமாஸ் விளக்குகளை பராமரிக்க வேண்டி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

The post குண்டும் குழியுமாக உள்ள அரசு வேலை வாங்கி தருவதாக வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Madurai-Tuticorin four-lane road ,Aruppukkottai ,Dinakaran ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...