×

9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு

 

மதுரை, ஜன. 20: மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவனை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.அவர் கூறி இருப்பதாவது: ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் கணக்கு துவங்கி, அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்கள் மற்றும் பெற்றோரின் வருமானம், சாதிச்சான்று நகல்களை அவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் வழங்க வேண்டும். தலைமையாசிரியர்கள் மாணவியர்களின் விபரங்களை எமிஸ் (எஜூகேசனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேசன் சிஸ்டம்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Sangeeta ,Union Government ,Dinakaran ,
× RELATED வேலைக்கு வெளிநாடு செல்லும்...