×

700 கார், ரூ. 4,000 கோடி அரண்மனை, 8 ஜெட் விமானங்கள் உலகின் நம்பர் 1 பணக்கார குடும்பம்

துபாய்: உலகின் பணக்கார குடும்பமான ஐக்கிய அரசு எமிரேட் தலைவர் அல் நஹ்யான் குடும்பம் 700 கார், 4 ஆயிரம் கோடி மதிப்பு அரண்மனை, 8 ஜெட் விமானங்கள் உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் அதிபராக இருப்பவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான். இவரது குடும்பம் தான் இந்த உலகின் நம்பர் 1 பணக்கார குடும்பமாக உள்ளது. எம்பிஇசட் என்று குடும்ப பெயரில் அழைக்கப்படும் இவருக்கு 18 சகோதரர்கள், 11 சகோதரிகள் உள்ளனர். மேலும் 9 குழந்தைகள், 18 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது அரண்மனை மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி ஆகும். 94 ஏக்கர் அளவில் அரண்மனை அமைந்துள்ளது. 3.50 லட்சம் படிகங்களில் செய்யப்பட்ட சரவிளக்கு அங்கு உள்ளது. அமெரிக்காவின் பென்டகன் அலுவலகத்தை விட மூன்று மடங்கு பெரியது. மேலும் 8 ஜெட் விமானங்களை சொந்தமாக வைத்துள்ளனர். இந்த குடும்பம் உலகின் எண்ணெய் இருப்புகளில் ஆறு சதவீதத்தை வைத்திருக்கிறது, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் மற்றும் பாடகர் ரிஹானாவின் அழகு பிராண்டான பென்டி மற்றும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றில் பங்குகளை வைத்திருக்கிறது.

அல் நஹ்யான் குடும்பத்திற்கு சொந்தமாக 700க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இதில் 5 புகாட்டி கார்கள், ஒரு லம்போர்கினி ரெவென்டன், ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் , ஒரு பெராரி கார்கள் இதில் இடம் பெற்று உள்ளன. இவர்களது குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28,000 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தவிர, துபாய், பாரிஸ், லண்டன் உட்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

2015ம் ஆண்டு நியூயார்க் அறிக்கையின்படி, துபாய் அரச குடும்பம் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் ஒப்பிடக்கூடிய சொத்துக்களைக் கொண்டிருந்தது. 2008ம் ஆண்டில், இங்கிலாந்து கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டியை ரூ. 2,122 கோடிக்கு வாங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மான்செஸ்டர் சிட்டி தவிர மும்பை சிட்டி, மெல்போர்ன் சிட்டி மற்றும் நியூயார்க் நகர கால்பந்து கிளப்புகளை இயக்கும் சிட்டி கால்பந்து குழுமத்தின் 81 சதவீத பங்குகளையும் இந்த குடும்பத்தினர் வாங்கி வைத்துள்ளார்கள்.

The post 700 கார், ரூ. 4,000 கோடி அரண்மனை, 8 ஜெட் விமானங்கள் உலகின் நம்பர் 1 பணக்கார குடும்பம் appeared first on Dinakaran.

Tags : Crore Palace ,Jets World ,Dubai ,UAE ,President ,Al Nahyan ,United Arab Emirates ,Sheikh Mohammed ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...