×

ஹேசல்வுட் வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் ஆஸி. அபார வெற்றி

அடிலெய்டு: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. முதலில் பந்துவீச… வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 188 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன் குவித்து ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 119 ரன், கவாஜா 45 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஷமர் ஜோசப் 5 விக்கெட், ஜஸ்டின் கிரீவ்ஸ், கெமர் ரோச் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 120 ரன்னுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்தது. ஆஸி. பந்துவீச்சில் ஜோஷ் ஹசல்வுட் 14 ஓவரில் 6 மெய்டன் உள்பட 35 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஸ்டார்க், லயன் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

26 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. 6.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. கவாஜா 9 ரன் எடுத்து காயத்தால் வெளியேறினார். ஸ்மித் 11, லாபுஷேன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜன.25ல் பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

The post ஹேசல்வுட் வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் ஆஸி. அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Hazelwood ,Aussies ,West Indies ,Adelaide ,Australia ,Adelaide Oval ,Aussie ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு