×

நாராயன் ஜெகதீசன் 155* தமிழ்நாடு ரன் குவிப்பு

கோவை: ரயில்வேஸ் அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்துள்ளது. தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 155 ரன் விளாசினார். எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், தமிழ்நாடு டாஸ் வென்று பேட் செய்தது. விமல் குமார், ஜெகதீசன் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். விமல் டக் அவுட்டாகி வெளியேற, பாலசுப்ரமணியம் 33, இந்திரஜித் 18, விஜய் ஷங்கர் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

ஜெகதீசன் – பூபதி குமார் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 142 ரன் சேர்த்தது. பூபதி குமார் 67 ரன் எடுத்து அவுட்டானார். தமிழ்நாடு முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்துள்ளது (90 ஓவர்). ஜெகதீசன் 155 ரன் (254 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்), முகமது அலி 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

* விதர்பா அணியுடன் நாக்பூரில் நடக்கும் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (ஹர்விக் 68, புஜாரா 43, உனத்கட் 28*). அடுத்து களமிறங்கிய விதர்பா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்துள்ளது.

* கேரளாவுக்கு எதிராக தும்பாவில் மோதும் மும்பை அணி முதல் இன்னிங்சில் 251 ரன்னுக்கு சுருண்டது (லால்வானி 50, ஷிவம் துபே 51, தணுஷ்கோடியன் 56).

The post நாராயன் ஜெகதீசன் 155* தமிழ்நாடு ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Narayan Jagatheesan ,Tamil Nadu ,Coimbatore ,Ranji Trophy C Division League ,Railways ,SNR ,College ,Dinakaran ,
× RELATED வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம்...