×

லாலு பிரசாத், தேஜஸ்விக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவ், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2004-2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது, இந்திய ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பீகாரை சேர்ந்த பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் வரும் 29ம் தேதி லாலு பிராசத்தும், 30ம் தேதி தேஜஸ்வியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post லாலு பிரசாத், தேஜஸ்விக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Lalu Prasad ,Tejaswi ,New Delhi ,Lalu Prasad Yadav ,Minister ,Congress ,UPA government ,Bihar ,Indian Railways ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...