×

2042ம் ஆண்டுக்குள் இந்தியா 2,500 விமானங்களை வாங்கும்: போயிங் நிறுவனம் கணிப்பு

ஐதராபாத்: 2042ம் ஆண்டுக்குள் இந்தியா 2,500 போயிங் விமானங்களை வாங்கும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் போயிங் நிறுவன வணிக சந்தைப்படுத்துதல் துறை துணைதலைவர் டேரன் ஹல்ஸ்ட் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டேரன் ஹல்ஸ்ட், “ தெற்காசிய நாடுகளில் விமான பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது.

இதனால் தெற்காசிய நாடுகள் தங்கள் விமான படைகளின் எண்ணிக்கையை 4 மடங்காக உயர்த்தும். இந்த வளர்ச்சியை பூர்த்தி செய்ய அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 2,705க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும். இதில் 92 சதவீத விமானங்கள் இந்தியாவுக்கு தேவைப்படும். எனவே 2042ம் ஆண்டுக்குள் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு 2,700க்கும் மேற்பட்ட விமானங்களை போயிங் நிறுவனம் விநியோகம் செய்யும் என எதிர்பார்க்கிறோம்” என்று இவ்வாறு தெரிவித்தார்.

The post 2042ம் ஆண்டுக்குள் இந்தியா 2,500 விமானங்களை வாங்கும்: போயிங் நிறுவனம் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Boeing ,Hyderabad ,Darren Hulst ,Vice President ,Marketing ,Boeing Company ,Telangana ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...