×

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு: 1,000 கனஅடியாக அதிகரிப்பு


கூடலூர்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 138.85 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 283 கனஅடி. அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று 511 கனஅடியாக இருந்து. இன்று காலை வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்பு நீர் 6,836 மில்லியன் கனஅடி. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1061 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 837 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,091 மில்லியன் கனஅடி.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 107 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 107 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்பு நீர் 100 மில்லியன் கனஅடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.10 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 56 கனஅடி. அணையிலிருந்து 80 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 457.98 மில்லியன் கனஅடி. மழை எங்கும் பதிவாகவில்லை.

90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் 1000 கனஅடி தண்ணீர் மூலம், தேனி மாவட்டம், கூடலூர் அருகே, லோயர்கேம்பில் உள்ள பெரியாறு நீர்மின்திட்ட உற்பத்தி நிலையத்தில் 90 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின்நிலையத்தில் 4 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் மூலம் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

The post முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு: 1,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mullaperiyar Dam ,Tamil Nadu ,Mullaperiyar ,
× RELATED முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 105 கனஅடி நீர்த்திறப்பு