×

குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் தை திருவிழா கொடியேற்றம்

தென்தாமரைகுளம்: கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடந்தது. இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

நாளை 2ம் நாள் இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், 3ம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5ம் நாள் பச்சை சாத்தி அன்ன வாகனத்தில் பவனி வருதல், 6ம் நாள் கற்பக வாகன பவனி, 7ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.

பின்னர் 26ம் தேதி 8ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு, தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது. 9ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10ம் திருவிழாவான (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11ம் திருவிழாவான 29ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

The post குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் தை திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Thai Festival ,Ayya Vaikunda Swamy Temple ,Samitoppu, Kumari District ,Thendamaraikulam ,festival ,Samithoppu Ayya Vaikunda Swami ,Kanyakumari ,Muttiri Padamittu school ,Ayya ,Samitoppu Ayya Vaikunda Swamy temple ,Kumari district ,Dinakaran ,
× RELATED சாமிதோப்பில் தை திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்