×

கடனை திரும்பச் செலுத்தவில்லை என தனக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது: விஷால் குற்றசாட்டு

சென்னை: கடனை திரும்பச் செலுத்தவில்லை என தனக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது என நடிகர் சங்க தலைவர் விஷால் தரப்பில் குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்பு செல்வனிடன் ரூ.21 கொடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்று கொண்டு செலுத்தியது.

இந்த தொகையை முழுவதும் செலுத்தும் வரை விஷால் படத்தின் அனைத்து உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தை மீறி வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட்டதாக விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ரூ.15 கோடியை டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்த போது விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்று லைகா நிறுவனம் தன் மீது அவதூறு பரப்பி தனக்கான பபிதா வாய்ப்புகளை தடுக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார். அத்துடன் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனை திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

லைகா நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் பெற வில்லை என்றும் கடன் பாக்கி வைத்திருக்கவில்லை என்றும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையை லைகா நிறுவனம் செலுத்தவில்லை என்றும் அதற்காக லைகா நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கவேண்டும் என்று தொடர்ந்த வழக்கானது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய கணக்கு தணிக்கையாளரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்றும் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை குறித்து லைகா நிறுவனம் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post கடனை திரும்பச் செலுத்தவில்லை என தனக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது: விஷால் குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : Lyca ,Vishal ,CHENNAI ,Vishal Film Factory ,Dinakaran ,
× RELATED முதுமை பயத்தை போக்கிய ஷங்கர், மணிரத்னம்: இந்தியன் 2 பற்றி கமல்ஹாசன்