×

குளிக்கச் சென்ற 11 பேரின் உயிர்களை காவுவாங்கிய கொடைக்கானல் அஞ்சுவீடு அருவி: அனைத்துத் துறை அதிகாரிகள், வன அலுவலர் ஆய்வு..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சன் நியூஸ் செய்தியின் தாக்கத்தால் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் ரம்மியமான வனசூழலில் நடந்துசென்று பார்வையிடும் வகையில் அமைந்திருக்கும் அருவியில், எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததால் அருவியில் குளிக்க செல்லும் பலர் உயிரிழப்பது தொடர்கதையாகி உள்ளது. இதுவரை 11 பேரை பழிவாங்கிய அருவியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சன் நியூஸ் செய்திகளில் செய்தி வெளியானது.

அதன் தாக்கமாக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து துறை அதிகாரிகள், வன அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அருவியில் ஆய்வு செய்தனர். அருவியை தொலைவில் இருந்து பார்ப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கவும், அருவிக்கு செல்லக்கூடிய வழித்தடங்கள் வேலியிட்டு அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் மிகவும் ஆபத்தான அருவிகளில் ஒன்றாக இந்த அஞ்சுவீடு அருவி கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post குளிக்கச் சென்ற 11 பேரின் உயிர்களை காவுவாங்கிய கொடைக்கானல் அஞ்சுவீடு அருவி: அனைத்துத் துறை அதிகாரிகள், வன அலுவலர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Anjuveedu ,Dindigul ,Sun News ,Kodaikanal Anjuveed Waterfall ,Kodaikanal ,Pethuparai ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...