×

புதுக்கோட்டையில் பொங்கலை ஒட்டி இருவேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். புதுக்கோட்டை அடுத்த முக்காணிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலய பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுப்புற இடங்களில் இருந்து 650 காளைகள் மற்றும் 350 வீரர்கள் பங்கேற்றனர்.

பார்வையாளர்களுக்காக பிரம்மாண்ட ஏற்பாடும் செய்யப்பட்டது. போட்டி தொடங்கியதும் வாடி வாசலில் இருந்து சீறி வந்த காளைகளை காளையர்கள் தழுவி அடக்கினர். சுற்றுவாரியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில், களம் இறங்கி காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், மல்லுக்கட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக மாடுகளை அடக்கிய காளையருக்கு போட்டி முடிவில் இருசக்கர வாகனம் பரிசளிக்கப்படவுள்ளது.

நீண்ட நேரம் களமாடும் காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்படவுள்ளது. இதேபோல் விராலிமலை அருகே உள்ள மண்டையூர் பகுதியிலும் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை திமுக நிர்வாகிகள் கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் வரை நிறுத்தும்படி அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்ததால் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அதிகாரிகள் தலையிட்டு போட்டியை தொடர வைத்தனர்.

 

The post புதுக்கோட்டையில் பொங்கலை ஒட்டி இருவேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Pongal ,Pudukottai ,Wadivasal ,Pudukottai district ,Pongal festival ,Arogya Annai temple ,Mukanipatti ,Vadivasal ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்