×
Saravana Stores

2 மாத தடைக்கு பின் சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி!

மதுரை: மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 மாத தடைக்கு பின் சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கடந்த 2 மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்லலாம் என்று வனத்துறை அனுமதி அளித்துள்ளது. காலை 7:00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரவு நேரத்தில் கோவிலில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கோயிலுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post 2 மாத தடைக்கு பின் சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Chaturagiri Temple ,MADURAI ,CHADURAGIRI TEMPLE ,SRIVILLIPUTHUR, MADURAI ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!