×

சேலம் பெரியார் பல்கலை.யில் ஆய்வு நடத்திய நிதி தணிக்கை குழு: முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் தணிக்கை குழு நடத்திய ஆய்வில் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் கைதாகி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை இயக்குனர் நீலாவதி தலைமையிலான 9பேர் கொண்ட குழுவினர் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதித்துறை அலுவலகத்தில் நேற்று காலையிலிருந்து ஆய்வு செய்தனர். ஒன்றிய மாநில அரசுகள் வழங்கிய நிதிகளின் பயன்பாடு, வரவு, செலவு கணக்குகள், பல்கலைக்கழக பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவை குறித்து இந்த குழுவினர் 7மணி நேரத்திற்கு மேலாக தணிக்கை செய்தனர்.

ஜெகநாதன் துணை வேந்தராக பதவியேற்ற பின்னர் வாங்கப்பட்ட பொருட்களின் விவரங்கள், அதற்கான ரசீதுகள், உறுதி தன்மை உள்ளிட்ட தணிக்கை குழு இரவு 7 மணி வரை விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பான ஆவணங்களை கட்டு கட்டாக அள்ளிச் சென்றனர். இதில் பல்கலைகழகங்களுக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகான ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலை.யில் ஆய்வு நடத்திய நிதி தணிக்கை குழு: முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Financial Audit Committee ,Salem ,Jehanathan ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...