×

பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு போலீசார் தங்குவதற்காக 12 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். சென்னையில் ‘கேலோ’ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இதுதவிர அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்திற்காக நாளை ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தீர்த்தங்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சேகரிக்கிறார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு போலீசார் தங்குவதற்காக 12 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்டக் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

The post பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Modi ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...