×

தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றியமைப்பு..!!

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்து கழகம் உட்பட 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது; இந்நிலையில் தற்போது அந்த கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொங்கல் பண்டிகை முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் அரசுவிரைவு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டம் செல்லக்கூடிய பயணிகளுக்கு பயண தூரம் குறைவதால் கட்டணம் குறைக்கப்பட்டது. சில வழித்தடங்களில் பயண தூரம் வேறுபாடு அடைந்திருப்பதால் பயண கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தப்படவில்லை எனவும் அரவு விரைவு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்திருக்கிறது. ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களுக்கும் தனித்தனியான கட்டண இருந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றியமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Govt Rapid Transport Corporation ,Tamil Nadu ,CHENNAI ,Government Rapid Transport Corporation ,Municipal Transport Corporation ,Government Transport Corporations ,Tamilnadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...