×

ஹிட் அண்ட் ரன் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், ஜன.19: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஹிட் அண்ட் ரன் சட்டத்தை திரும்பபெறக்கோரி திருப்பூரில் நேற்று வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கனரக வாகனங்கள் விபத்து ஏற்படும்போது, உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டால் ஹிட் அண்ட் ரன் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது கனரக வாகன ஓட்டுனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சட்டத்தை வாபஸ் பெற கோரி நேற்று முன்தினம் முதல் கனரக வாகன ஓட்டுநர்கள் பல்வேறு மாநிலங்களிலும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல நீலகிரி மாவட்டத்திலும் கனரக வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ராமசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட கெளரவ தலைவர் சேமலையப்பன், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்தும், புதிய வாகன திருத்த சட்டத்தை கைவிடக்கோரியும் கோஷமிட்டனர்.

The post ஹிட் அண்ட் ரன் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Union government ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...