×

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் முகாம்: நாைள நடைபெறுகிறது  கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஜன. 19: குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான முகாமில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறும்படி கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நாளை 20ம் தேதி சனிக்கிழமை பின்வரும் கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவுசெய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.

இந்த மனுக்களின் விவரங்களை அனைத்து வட்டவழங்கல் அலுவலர்களும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, திருவள்ளூர் வட்டம், புதுமாவிலங்கை கிராமம், எம்.ஜி.ஆர். நகர் நியாயவிலைக் கடை அருகிலும், ஊத்துக்கோட்டை வட்டம், சீயஞ்சேரி கிராமம் நியாயவிலைக் கடை அருகிலும், பூந்தமல்லி வட்டம், இருளர்பாளையம் கிராமம் நியாயவிலைக் கடை அருகிலும், திருத்தணி வட்டம், வியாசபுரம் கிராமம் நியாயவிலைக் கடை அருகிலும், பள்ளிப்பட்டு வட்டம், மேலக்குடி கிராமம் நியாயவிலைக் கடை அருகிலும், பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு கிராமம் 1, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், கும்மிடிப்பூண்டி வட்டம், மெதிப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், ஆவடி வட்டம், அன்னம்பேடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், ஆர்.கே.பேட்டை வட்டம், எஸ்.பி.கண்டிகை கிராமம் நியாயவிலைக் கடை அருகிலும் நடைபெற உள்ளது. எனவே, அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவுசெய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் முகாம்: நாைள நடைபெறுகிறது  கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur District ,Collector ,Prabhu Shankar ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு...