×

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை வருவோரால் பொத்தேரி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு: நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கினர்

செங்கல்பட்டு, ஜன.19: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால், பொத்தேரி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்தனர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில், பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகள் மற்றும் மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேடு வரை இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், வண்டலூர் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே பொத்தேரி பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் இருப்பதால் தென் மாவட்டத்திலிருந்து வரும் மக்கள் பொத்தேரியில் இறங்கி புறநகர் மின்சார ரயில்கள் மூலமாக சென்னைக்கு செல்கின்றனர். இதனால், பயணச்சீட்டை பெறுவதற்கு நீண்ட வரிசையில் அவர்கள் பலமணி நேரம் காத்திருந்தனர். மேலும், வழக்கத்திற்கு மாறாக பொத்தேரி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

எளிதாக செல்ல…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து அதன் பிறகு சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு ரயிலில் எறி செல்வது மிக சிரமம் ஏன் என்றால் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் 1.05 கிமீ தூரம். அதனால், மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளை அவ்வளவு தூரம் அழைத்து செல்வது கடினம். அதனால், சென்னைக்கு அருகே உள்ளே கிண்டி, சைதப்பேட்டை, கோடம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பெத்தேரியில் இறங்கினால் மின்சார ரயிலில் எளிதாக செல்லலாம். அதேபோல், கொருக்குபேட்டை, திருவொற்றியூர், மணலி, உள்ளிட்ட வட சென்னை பகுதிகளுக்கு இங்கு இறங்கினால் எளிதாக செல்லலாம்.

The post பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை வருவோரால் பொத்தேரி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு: நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கினர் appeared first on Dinakaran.

Tags : Pongal holiday ,Potheri railway station ,Chennai ,Chengalpattu ,Pongal festival holiday ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...