×

மதுராந்தகத்தில் ₹2.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்: பழைய கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்

மதுராந்தகம், ஜன.19: மதுராந்தகத்தில் ₹2.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக, பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் கடந்த 1987ம் ஆண்டு ₹32 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு, 48 கடைகளுடன் 1992ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததால், பேருந்து நிலைய கட்டிடத்தின் மேல் தள பகுதியில் மரம் செடி, கொடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டது. இதனால், பேருந்து நிலையத்தின் உள்புறம் சிமென்ட் பூச்சுகள் உடைந்து விழுந்து பயணிகள் காயமடைந்தனர்.

மேலும், மழை காலங்களில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மழைநீர் கசிந்து, கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் நனைந்து வீணாகியது. தொடர்ந்து இந்த பேருந்து நிலைய கட்டிடம் பழுதடைந்து வந்ததால், புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று, கடந்த ஓராண்டாக அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து, புதிய கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில், கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் மூலம் ₹2.50 கோடி மதிப்பில் 48 கடைகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, பேருந்து நிலைய கட்டிடத்தில் கடைகள் நடத்திய வணிகர்கள் கடைகளை காலி செய்தனர்.

மேலும், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் சாலையில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்து சேவை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், அண்ணா பேருந்து நிலைய கட்டிடம் இடிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று 75 சதவீத இடித்து அகற்றும் பணிகள் முடிவடைந்துள்ளது. அந்த இடத்தில் கலைஞர் நகர் புற மேம்பாடு திட்டத்தின் மூலம் ₹2.50 கோடி மதிப்பில் 48 புதிய கடைகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

The post மதுராந்தகத்தில் ₹2.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்: பழைய கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : NEW BUS STATION ,MADURANTHAKH ,Maduranthakam ,Maduranthaka ,CHENGALPATTU DISTRICT ,MADURANTHAGAM ,ANNA BUS STATION ,Bus Station ,Madurantakha ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!