×

கேலோ இந்தியா விளையாட்டு நடக்கவுள்ள மேலக்கோட்டையூர் மைதானத்தில் கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு

திருப்போரூர், ஜன.19: மேலக்கோட்டையூர் விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த மைதானத்தினை கலெக்டர் ராகுல்நாத் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று (19ம்தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிகளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்திய பிரதமர் மோடி கலந்துக்கொண்டு தொடங்கி வைக்கிறார். இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னை மட்டுமின்றி திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் நடைபெற உள்ளன.

சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கம், வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழக மைதானம் ஆகியவற்றில் இந்த விளையாட்டு போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இன்று (19ம்தேதி) முதல் 31ம்தேதி வரை சைக்கிளிங், இறகுப்பந்து, குத்துச்சண்டை, வாள் வீச்சு, டேபிள் டென்னிஸ் ஆகிய 5 பிரிவுகளுக்கான போட்டிகள் மேலக்கோட்டையூரில் நடத்தப்பட உள்ளன.

இந்த போட்டிகள் நடத்துவதற்காக மைதானங்களில் செய்யப்பட்டுள்ள சிந்தடிக் விரிப்புகள், வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடுகள், உணவு மற்றும் கழிப்பறை வசதிகள், பார்வையாளர்களுக்கான மாடங்கள் போன்றவற்றை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ரமேஷ், மாவட்ட தலைமை பொறியாளர் கவிதா, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள் தேவி, சசிகலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கேலோ இந்தியா விளையாட்டு நடக்கவுள்ள மேலக்கோட்டையூர் மைதானத்தில் கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Collector ,Rahul Nath ,Melakottaiyur ,Gallo India Games ,Tirupporur ,Melakottaiyur Sports Ground ,Rahulnath ,Tamil Nadu ,Chennai ,Gallow India Games ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்