×

மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல் ஆலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி

குளச்சல், ஜன 19 : மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் உயரிய முயற்சியை நிறுவனம் சமூக பொறுப்பின் கீழ் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கம்பியூட்டர் மற்றும் அதை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக கொடுக்க உள்ளது. இந்த பயிற்சி 50 வேலை நாட்கள் அளிக்கப்படும். இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கு திறமையின் அடிப்படையில் திருவனந்தபுரம் தனியார் கல்வி வேலை நிறுவனம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும். விருப்பமுள்ள நபர்கள் துணை பொதுமேலாளர் (கனிம வள ஆதாரம்) செல் போன் 9443179037 மற்றும் துணை தொழில் நுட்ப அலுவலர் செல் போன் 8903438016 ஆகிய எண்களில் வரும் 24ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி தகுதி: 12ம் வகுப்பு, ஐ.டிஐ தேர்ச்சி. மற்றும் டிப்ளமோ, பி.எஸ்.சி கம்பியூட்டர், பி.இ.மற்றும் ஐ.டி. வயது 18 முதல் 35 வயது வரை.

The post மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல் ஆலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Manavalakurichi IREL Plant ,Kulachal ,Manavalakurichi IREL ,Manavalakurichi ,plant ,Dinakaran ,
× RELATED குளச்சல் அருகே நிலபுரோக்கர் வீட்டில் திருடிய வாலிபர் கைது 3 பேருக்கு வலை