×

கரூர் ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்

 

கரூர், ஜன.19: பொங்கலை முன்னிட்டு கரூர் ஒன்றிய திமுக சார்பில் வாங்கல் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, சோமுர் ஆகிய பகுதியில் ஓட்டப்பந்தயம், கபடி போட்டி, கைப்பந்து போட்டி, பானை ஓட்ட போட்டி ,பானை உடைத்தல் போட்டி ,கயிறு இழுத்தல் போட்டி ,ஸ்பூனில் எலுமிச்சம்பழம் கொண்டு செல்லும் போட்டி, இசை நாற்காலி, லக்கி கார்னர், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் போட்டி ,உடல் திறன் போட்டி, கரண்டியில் எலுமிச்சம் பழம் வைத்து வேகமாக எடுத்துச் செல்லுதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு கரூர் இந்தியா முத்துக்குமாரசாமி கலந்து கொண்டு பரிசு வழங்கினார். இதில் நிர்வாகிகள் கந்தசாமி, செந்தில்குமார், சோமசுந்தரம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கரூர் ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Pongal Games ,Karur Union Dhimuka ,Karur ,Karur Union ,Dhimuka ,Vangal Minnamballi Panjamadevi ,Somur ,Kabadi ,Karur Union Dimuka ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...