×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெ.வா மின் உற்பத்தி தொடங்கியது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இதில், கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் நேற்று 600மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

The post வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : North Chennai Thermal Power ,Station ,CHENNAI ,North Chennai Thermal Power Station ,Vadachennai ,Thermal Power Station ,Athipat ,Meenjoor ,
× RELATED சென்னையில் தெரிந்தது சர்வதேச விண்வெளி நிலையம்