×

நாடாளுமன்ற கலர் குண்டு வீச்சு பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: மக்களவையில் கடந்த மாதம் கலர் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மொத்தம் இளம்பெண் நீலம் ஆசாத் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களது போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து கடந்த வாரம் சனியன்று 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து இவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீலம் ஆசாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

The post நாடாளுமன்ற கலர் குண்டு வீச்சு பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Neelam Azad ,Lok Sabha ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் சி.ஏ தேர்வு தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி