×
Saravana Stores

தை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி தரிசனத்துக்கு 4 நாள் அனுமதி


வத்திராயிருப்பு: தை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜன.23 முதல் 26ம் தேதி வரை 4 நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மொத்தம் 8 நாட்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி, தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்கள் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையோ, பிளாஸ்டிக் பொருட்களையோ கொண்டு செல்லக்கூடாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி தரிசனத்துக்கு 4 நாள் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chaturagiri Darshan ,Thai Mata Pradosham ,Pournami ,Vathirairuppu ,Chathuragiri Sundaramakalingam Temple ,Chaduragiri ,Virudhunagar ,Vathirairupu ,
× RELATED பவுர்ணமி கிரிவல பூஜை