×
Saravana Stores

டெல்லியில் ஓட்டலில் பணம் கொடுக்காமல் தங்கிய பெண் கைது


புதுடெல்லி: ஆந்திராவை சேர்ந்தவர் ஜான்சி ராணி சாமுவேல் (37). இவர், டெல்லி ஏரோசிட்டி பகுதியில் உள்ள ஓட்டலில் கடந்த மாதம் 13ம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் கேட்டபோது, அவர் சரியான பதில் கூறவில்லை. மாறாக, வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஓட்டல் ஊழியர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி ஜான் ராணி சாமுவேலை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டெல்லியில் ஓட்டலில் பணம் கொடுக்காமல் தங்கிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Delhi New Delhi ,Jhansi Queen Samuel ,Andhra ,Delhi ,
× RELATED ஆந்திராவில் டயர் வெடித்ததில் கார்...