×

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தகவல்

கடலூர்: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக, அமைச்சர் சிவசங்கர் கடலூரில் நிருபர்களிடம் கூறினார்.மணல் குவாரி பிரச்சனை வழக்கு சம்பந்தமாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழிலாளர் நலத்துறை சார்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன், 19ம் தேதி ( நாளை) சென்னையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் விழாவிற்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கூடுதலாக ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். கடந்த வருடம் தனியார் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் தற்போது அரசு போக்குவரத்து கழகத்தை நம்பி அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் கடந்த ஆண்டை விட கூடுதலாக 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

விடுமுறை முடிந்து சென்னை செல்லும் மக்களுக்காக இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள். இயக்கப்படும் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும்மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூடுதல் தேவைகள் இருந்தாலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து படிப்படியாக அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த வாரத்தில் ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்கள் குறித்து பேசி அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். திமுக கடலூர் மாநகர செயலாளர் ராஜா, வழக்கறிஞர் அணி கார்த்தி, திமுக அவை தலைவர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tripartite ,unions ,Minister ,Sivashankar ,Cuddalore ,Sivasankar ,Transport Minister ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...