×

திருவள்ளூர் பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா: பக்தர்கள் திரண்டனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் கிராமத்தில் நேற்று காணும் பொங்கல் முன்னிட்டு பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்டிஇ.ஆதிசேஷன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் களாம்பாக்கம் எம்.பன்னீர் முன்னிலை வகித்தார். திருவிழாவில் பேரம்பாக்கம் திரவுபதி அம்மன் கோயில் அருகே உள்ள தீவுத்திடலில் பேரம்பாக்கம் கிராமத்தில் இருந்து காமாட்சியம்மன் சமேத சோளீஸ்வரர், பாலமுருகர், களாம்பாக்கம் மரகதவல்லி சமேத திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் வள்ளி, தெய்வானை சமேத முருகர், மாரிமங்கலம் சிவமாரிநாராயணி அம்மன், சிவபுரம் குறுந்த விநாயகர் உட்பட 5 கிராமங்களில் இருந்து சுவாமி சிலைகள் வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் கொண்டு வந்து அனைத்து சுவாமிகளும் ஒரே வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன்பின்னர் சுவாமிகளின் வாகனங்கள் வரிசையாக அசைந்தாடி பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொரு சாமிக்கும் கற்பூர ஏற்றி தேங்காய், பழம் படைத்து தரிசனம் செய்தனர். அனைத்து சாமிகளும் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடி பொதுமக்களுக்கு தரிசனம் செய்வதற்காக காட்சியளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பாரிவேட்டை திருவிழாவில் கவுன்சிலர் குலாபி, சிவபுரம் தாமோதரன், நரசிங்கபுரம் மோகன், கருணாநிதி, பேரம்பாக்கம் எல்ஐசி பாபு, தனசேகர், தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரை, முன்னாள் கவுன்சிலர் அன்பு, ஏகாம்பரம், மாணிக்கம், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஆர்டிஇ.சந்திரசேகர், ஆர்.சேகர், ரமேஷ், பிரவீன்குமார், ஆசிரியர் சேகர், பிஜேபி சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாரிவேட்டை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவின்படி, ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பத்ம பபி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

The post திருவள்ளூர் பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா: பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Tags : Parivettai festival ,Tiruvallur ,Perambakkam ,Thiruvallur ,Kadampathur ,Tiruvallur district ,DMK State Agriculture Team ,Deputy Secretary ,RTE ,Kalambakkam ,M. Panneer ,Thiruvallur Perambakkam Parivetaya Festival: Devotees thronged ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...