×

புரோ லீக் கபடி இன்று போட்டிகள் இல்லை: ஐதராபாத்தில் நாளை 4 அணிகள் மோதல்


ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் ஜெய்ப்பூர்-அரியானா அணிகள் மோதின. இதில் 37-27 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை ஜெய்ப்பூர் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து நடந்த 2வது போட்டியில் குஜராத்-டெல்லி அணிகள் மோதின. இதில் குஜராத் அணி 31-26 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. புரோ கபடி லீக்கில் இன்று போட்டிகள் எதுவும் இல்லை.

நாளை ஐதராபாத்தில் உள்ள இந்தூர் ஸ்டேடியத்தில் புரோ கபடி லீக் தொடர்கள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணியும், 2வது போட்டியில் டெல்லி-யு.மும்பா அணிகளும் மோதுகின்றன.

The post புரோ லீக் கபடி இன்று போட்டிகள் இல்லை: ஐதராபாத்தில் நாளை 4 அணிகள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Pro League Kabaddi ,Hyderabad ,Jaipur ,Ariana ,Pro Kabaddi League ,Gujarat ,Delhi ,Pro League ,Kabaddi ,Dinakaran ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்