×

பொங்கலையொட்டி நூதன போட்டி: மிக வேகமாக 1 கிலோ பிரியாணி சாப்பிட்டு; பரிசு வென்ற பெண்: 10 நிமிடத்தில் 1 கிலோ சிக்கனை காலி செய்த விவசாயி


தர்மபுரி: தர்மபுரி அடுத்த முக்கல்நாயக்கன்பட்டியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில்லி சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிடும் போட்டி நடந்தது. தர்மபுரி மாவட்டம் முழுவதும், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கபடி, பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டிகள் நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதே போல், முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வித்தியாசமான முறையில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்ட விரைவாக சிக்கன் பிரியாணி, சிக்கன் வறுவல் சாப்பிடுதல், 2 லிட்டர் கூல்டிரிங்ஸ் குடித்தல் ஆகிய போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிக்கன் பிரியாணியையும், சிக்கன் வறுவலையும் ருசித்து சாப்பிட்டனர்.

பிரியாணி சாப்பிடும் போட்டியில் 10 பேர் கலந்து கொண்டனர். மிக வேகமாக முதலில் சாப்பிடுபவருக்கு முதல் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. 1 கிலோ பிரியாணியை மிக வேகமாக சாப்பிட்டு ஷாலினி (27) என்ற பெண் முதல் பரிசை பெற்றார். அதேபோல் 1 கிலோ சில்லி சிக்கனை 10 நிமிடத்தில் சாப்பிட்டு விவசாயி பச்சியப்பன் (30) என்பவர் முதல் பரிசை தட்டிச்சென்றார். 2 லிட்டர் கூல்டிரிங்சை கட்டிட தொழிலாளி ராஜ்குமார் (22) என்பவர், 5 நிமிடத்தில் குடித்து முதல் பரிசை பெற்றார். வித்தியாசமான இந்த போட்டிகளை காண ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற பெண் உள்ளிட்டோரை பொதுமக்கள் பாராட்டினர்.

The post பொங்கலையொட்டி நூதன போட்டி: மிக வேகமாக 1 கிலோ பிரியாணி சாப்பிட்டு; பரிசு வென்ற பெண்: 10 நிமிடத்தில் 1 கிலோ சிக்கனை காலி செய்த விவசாயி appeared first on Dinakaran.

Tags : Pongal Nutana Contest ,Dharmapuri ,Mukkalnayakanpatti ,Pongal ,Pongal festival ,Pongal Nutana Competition ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி